ETV Bharat / state

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள ஸ்டாண்டுக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட முடிவு

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியதில் உள்ள அண்ணா பெவிலியனில் புதிதாக அமைய இருக்கும் ஸ்டாண்டுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைக்கப்படுகிறது.

author img

By

Published : Mar 11, 2023, 3:20 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: மெரினா கடற்கரை அருகில் அமைந்து இருக்கும் மைதானம் என்ற பெருமையை உடையது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம். 1916ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மைதானம் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மைதானம் அல்லது சேப்பாக்கம் ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு பிறகு இந்த மைதானம், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரின் நினைவாக எம்.ஏ. சிதம்பரம் மைதானம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

இது இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, இந்த மைதானத்தில் பல்வேறு உள்ளூர் போட்டிகள், ரஞ்சி ட்ரோபி போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அணி வீரர் வீரேந்திர சேவாக் 319 ரன் அடித்தது இந்த மைதானத்தில் தான். இது தான் இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் ஸ்கோராகும்.

இந்த மைதானத்தில் உள்ள கேலரிக்கு அரசியல் தலைவர்கள் பெயர் எதுவும் சூட்டப்படாமல் இருந்தது. முதல் முதலாக அண்ணா பெவிலியன் என்று பெயர் சூட்டப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில் அதற்காகவும் ஸ்டேடியம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தற்போது எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மறுசீரமைப்பு பணிமட்டுமன்றி புதிய ஸ்டாண்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அப்படி அண்ணா பெவிலியனில் அமைய இருக்கும் புதிய ஸ்டாண்டுக்கு தமிழ்நாட்டில் 5 முறையாக முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பெயர் சூட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் மார்ச் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைக்க முக்கிய காரணம் என்னவென்றால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கிரிக்கெட் விளையாட்டு மீது அதிக பிரியம் உடையவர். கருணாநிதிக்கு கிரிக்கெட் பற்றி அனைத்தும் அத்துப்படி, எந்த வேலையாக இருந்தாலும் முக்கிய போட்டிகளை அவர் கண்டுகழிப்பார். அதுமட்டுமின்றி அவர் தோனியின் மிக பெரிய ரசிகர் ஆவார்.

ஸ்டேடியத்திலுள்ள புதிய ஸ்டாண்டுக்கு கருணாநிதியின் பெயர்

மேலும் அந்த ஸ்டேடியம் அமைந்திருக்கும் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பல முறை இருந்து இருக்கிறார். எனவே அவரை கௌரவப்படுத்த அவர் பெயரை சூட்டப்படுவதாக கூறுகின்றனர். தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான இருக்கும் அசோக் சிகாமணி தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் கே பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுசீரமைக்கப்பட்ட அண்ணா பெவிலியன் மற்றும் புதிய ஸ்டாண்டுக்கு பெயரை இந்தியா கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி மாலை திறந்து வைக்கவுள்ளார்.

இதையும் படிங்க: "முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்த அங்கீகாரம்" நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.