ETV Bharat / state

Chennai corporation: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிட்டீஸ் திட்டத்தின் மூலம் கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி தொடக்கம்!.. - சிட்டீஸ் திட்டம்

"என்னுள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வம் போல் இங்கு பலபேரிடம் உள்ளது, குறிப்பாக மாணவர்களிடம், அதை கண்டிப்பாக வெளிக்கொண்டு வர வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிட்டீஸ் திட்டத்தின் மூலம் கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி தொடக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:42 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சிட்டீஸ் (City Investments to Innovate Intergrate and Sustain) என்ற சிறப்பு திட்டத்தின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளை புதுமை மற்றும் மாதிரி பள்ளிகளாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அப்பள்ளிகளின், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஸ்மார்ட் வகுப்புகள் என பல்வேறு வகையில் கல்விதரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல், கலை, இலக்கியம், மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய வகையில் கல்வி தரத்தையும் மற்றும் விளையாட்டில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த ரூ 95.25 கோடி மதிப்பீட்டில் நடைமுறைபடுத்தி வருகிறது சென்னை மாநகராட்சி.

அதேப்போல், விளையாட்டுதுறையில் மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்க சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியை மேற்கொள்ள வரைவு திட்டத்தின் அடிப்படையில் மாணவ -மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கால்பந்து பயிற்சி அளித்தல்: இந்த கால்பந்து பயிற்சிக்கு 60 மாணவ - மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 3 குழுக்களாய் பிரிந்து, ஒவ்வொறு குழுக்கும், 20 மாணவ மாணவிகள் என்ற கணக்கில், கால்பந்து அணிகள் உருவாக்கப்படும். மேலும், இந்த பயிற்சியானது, 11 மாதங்களில் 80 பயிற்சி நாட்களில் (வாரம் இருமுறை) கொடுக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பயன்பெறும் மாணவ - மாணவிகளுக்கு, கால்பந்து உடைகள் மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் முதல் கட்டமாக மூன்று பகுதிகளில் தொடங்க உள்ளது.

வடசென்னையில் சென்னை உயர்நிலைப் பள்ளி தொண்டையார்பேட்டை, மத்திய சென்னையில் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தென்சென்னையில் - சென்னை உயர்நிலைப்பள்ளி கோட்டூர், ஆகிய பள்ளிகளில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Bronze Nataraja statue: சாலை மார்க்கமாக புதுடெல்லிக்கு புறப்பட்டது உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை..!

கிரிக்கெட் பயிற்சி அளித்தல்: சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை முறையான வரைவுத்திட்டத்தின் படி கல்வி மாவட்ட வாரியாக தேர்வு செய்து, அதில் மிக திறமையான முப்பது மாணவர்களை கொண்ட சென்னை பள்ளிகள் கிரிக்கெட் அணியை உறுவாக்குவதாகும். இப்பயிற்சி ஆனது 12 மாதங்களில் 154 பயிற்சி நாட்களில் (வாரம் மூன்று முறை) கொடுக்கப்படுகிறது. இதில் 22 நாட்கள் போட்டிகளுக்கு ஒதுக்கபடும் இப்பயிற்ச்சியில் பயன்பெறும் மாணவ மாணவிகளுக்கு, கிரிக்கெட் பேட், பந்து, காலணிகள் அத்யாவசிய உபகரணங்கள் இலவசமாக வழங்கபடும் மற்றும் இப்பயிற்சியை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - நுங்கம்பாக்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சிக்காக ஆறு பயிற்சி தளங்கள் (Fileds and Pitches) நவீன முறையில் உருவாக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, “ இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஆர்.அஸ்வின் அவரின் ஜெனரேஷன் நெக்ஸ்ட்ஸ் போர்ட்ஸ் அகாடமி சார்பில், சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கபட்டு வருகின்றன. மேலும் என்னுள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வம் போல் இங்கு பலபேரிடம் உள்ளது, குறிப்பாக மாணவர்களிடம். அதை கண்டிப்பாக வெளிக்கொண்டு வர வேண்டும்.

சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் செய்து வருகிறோம். வசதிகள் இருந்தால் மட்டும் போதாது, மாணவர்களுக்கு சிறந்த பயிறிச்சியாளர்களை அளிக்க வேண்டும் அதன் நோக்கமாக சென்னை மாநகராட்சி செய்து வருகிறது." என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Metro rail: நெல்லையில் மெட்ரோ ரயில் கனவு கானல் நீரானது- சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.