கிரடாய் எனும் நாடு தழுவிய மனை வணிகர்கள் மேம்பாட்டு அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் ஆறாவது தலைவராக சுரேஷ் கிருஷ்ணன் இன்று (ஏப். 23) பொறுப்பேற்றுக்கொண்டார். நாடு முழுவதும் 217 நகரங்களில் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள இந்த அமைப்பில் தமிழ்நாட்டில் 297 நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.
ரியஸ் எஸ்டேட் துறையின் முக்கிய முகமாக இந்த அமைப்பு பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகர பிரிவுகளுக்கு தலைமை ஏற்கிறார்.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இணைய வழியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு கிரடாய் தேசியத் தலைவர் வர்தன் பட்டோடியா தலைமை தாங்கினார். போமன் இரானி, ராம் ரெட்டி உள்ளிட்ட மூத்த பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
வீடுகளுக்கான தேவை தொடர்ந்து நீடிக்கும் என கூறும் சுரேஷ் கிருஷ்ணன், வருங்கால இந்திய பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை முக்கியப் பங்காற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை ஒரு குடையின் கீழ் இணைத்து, இத்துறையின் கோரிக்கைகளை அரசுகளிடம் வலியுறுத்தி தொழில் சிறப்பான வகையில் முன்னேற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிலுவைத் தொகையை பெற்றுத்தரக்கோரி ஒப்பந்ததாரர் உண்ணாவிரதம்: போலீஸ் விசாரணை!