ETV Bharat / state

காலணிகளுக்கு இந்திய அளவு முறை உருவாக்கம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் - ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து

இந்தியாவுக்கென பிரத்யேக காலணி அளவு முறையை (Size Chart) உருவாக்கும் பணியை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் (CLRI) தொடங்கிவைத்தார். காலணி அளவில் தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய முறைகள் பின்பற்றப்படுகின்றன.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
author img

By

Published : Jan 9, 2021, 8:16 PM IST

சென்னை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி அமைப்பின் துணைத் தலைவருமான ஹர்ஷ் வர்தன், சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் (CLRI) தோல் பொருள்கள், தோலினாலான ஆடைகள், காலணிகள் குறித்த கண்காட்சியைப் பார்வையிட்டார்.

அப்போது, காலணிகளுக்கு இந்திய அளவை உருவாக்கும் பணியைத் தொடங்கிவைத்தார். இதனை உருவாக்க, ஒரு லட்சம் மாதிரி அளவுகள் எடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக தன்னுடைய காலணி அளவை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வழங்கினார். காலணி அளவீட்டில் தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அளவீடுகள் பின்பற்றப்படுகின்றன.

காலணி அளவு முறை
காலணி அளவு முறை

முன்னதாக, புதிய வகை தோல் காலணிகளை உருவாக்கும் ஸ்டுடியோவை அலுவலர்களுடன் அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து தோல் ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.ஜே. ஸ்ரீராம், மூத்த அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி அமைப்பு (CSIR) தொடங்கப்பட்டுவிட்டது. இந்த அமைப்பு தோல் துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளது. தற்போது உலகில் தோல் பொருள்கள் விற்பனையில் இந்தியா முன்னணியில் உள்ளது.

தற்போது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட காலணி அளவுகளை நாம் பின்பற்றிவருகிறோம். ஆனால், அவை நம் நாட்டு மக்களுக்கு ஏற்றதாக இல்லை. கடைக்குச் சென்று 7 அல்லது 8 என்ற அளவுகளில் காலணி அணிந்தால் பலருக்கும் சரியாக இருக்காது.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

இதனைப்போக்கும் வகையில் இந்தியாவுக்கென தனிக்காலணி அளவு உருவாக்கப்பட்டுவருகிறது. ஒரு லட்சம் மாதிரி காலணி அளவுகளை வைத்து அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்கான காலணி அளவை உருவாக்கும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச காலணி தயாரிப்புகளில் இந்திய காலணி அளவு இடம்பெறும்.

பெண்களுக்கு என பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட காலணியை இன்று அறிமுகப்படுத்தினேன். உலகளவில் இந்தியப் பொருள்கள் தனி அடையாளம் பெற்றுவருகிறது. தற்சார்பை நோக்கி இந்திய நகர்ந்துவருகிறது. கரோனா பரவல் குறித்து முதல் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அப்போது பரிசோதனை கருவிகள், முகக்கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பலவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.

தற்போது நாம் 150 நாடுகளுக்கு மருந்துப் பொருள்களை ஏற்றுமதி செய்துவருகிறோம். கரோனா தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகித்துவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நம் நாடு முன்னணியில் உள்ளது" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.