கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழக முதலமைச்சரின் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற , சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத் தொகையும் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், தமிழ்நாடு மக்களையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கக் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மோசமான பொருளாதார மந்தநிலையில் உலகம் - ஐஎம்எஃப் தலைவர் எச்சரிக்கை!