ETV Bharat / state

‘மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்களுக்குள் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடாது’

மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையில் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

Communist General Secretary of India D. Raja
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி
author img

By

Published : Jul 13, 2021, 2:50 PM IST

சென்னை: தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா கரோனாவை எதிர்கொள்வதற்கு முன்பிலிருந்தே இந்தியப் பொருளாதாரம் நலிந்துபோய் இருந்தது.

கரோனா தொற்று ஏற்பட்டதும் மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியா வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவின் இந்த நிலைக்கு மோடியின் தவறான கொள்கைதான் காரணம்.

டிஜிட்டல் இந்தியாவில் ஏற்றத்தாழ்வு

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் வரிதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம். ஸ்மார்ட்போன் வாங்க வசதி இல்லாத குழந்தைகள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தைகள் என புதிய ஏற்றத்தாழ்வை இந்தியா முழுவதும் மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசின் கொள்கை இந்தியாவை நாசப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பாஜக படுதோல்வி அடைந்துவிட்டது. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா பேட்டி

கொங்குநாடு கோரிக்கை

கொங்குநாடு குறித்து பேசுபவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு தற்போது கடன்கார மாநிலமாக உள்ளது.

திமுக அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்ல முயற்சி மேற்கொண்டுவருகிறது. திமுக அரசை இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு அதைப் புரிந்துகொள்ளவில்லை. திமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் நீட் தேர்வை எதிர்க்கவில்லை.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலம் நீட் தேர்வை எதிர்த்தாலும் அதை நிறுத்த வேண்டும்.

பிரிவினை செய்யும் பாஜக

எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் வைத்துக்கொள்வதற்காகவும், வகுப்புவாதம்-மதவாதத்தை கையில் எடுப்பதற்காகவும் பாஜக முயலுகிறது. மேகதாது விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தக் கூடாது" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.