சென்னை: கேளம்பாக்கம் அருகே இயங்கி வரும் சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியில் படித்த மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இது தொடர்பாக அவர் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் இரண்டு போக்சோ வழக்குகளில் ஏற்கனவே கைதாகி தற்போது புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கு சம்மன்
மேலும், சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக அப்பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேரை ஜூலை 19ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்த நிலையில், யாரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
எனவே அவர்களுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்படும் என்றும், ஆஜராகாவிட்டால் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிபிசிஐடி விசாரணை
இந்நிலையில், நேற்று (ஜூலை 20) மூன்று பெண் ஆசிரியர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை தெரிவித்தனர்.
மேலும், இதுதொடர்பாக எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என அவர்களுக்கு சிபிசிஐடி அலுவலர்கள் உத்தரவிட்டனர்.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபா, ஆசிரியை சுஸ்மிதா தாக்கல்செய்த பிணை மனுக்கள் தள்ளுபடி