சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் பக்தவச்சலம் தெருவில், காலி மனை அருகே கழிவு நீர் தொட்டி உள்ளது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீரென 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் விழுந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பசுமாட்டை கயிறால் கட்டி மீட்க முயன்றனர். மேலும், தொட்டியில் இறங்க முடியாததால், தொட்டி முழுவதும் தண்ணீரால் நிரப்பி மாட்டை கயிறால் இழுத்து மீட்டனர்.