ETV Bharat / state

சென்னை வந்தடைந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் - சென்னை விமானநிலையம்

சென்னை: புனேவில் இருந்து ஆறு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமான நிலையம் வந்தடைந்தன.

covishield
covishield
author img

By

Published : May 15, 2021, 3:53 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுக்கு தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய மருந்து தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முன்னதாக கோரிக்கை வைத்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்புக் கிடங்கிலிருந்து கோவிஷீல்டு, கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஆறு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இன்று (மே 15) சென்னை வந்தடைந்துள்ளன.

இந்தத் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், குளிர்சாதன வாகனம் மூலம் தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். பின் அங்கிருந்து அனைத்து மாவட்டத்திற்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பிவைக்கப்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.