தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஐந்து வாரங்களாக தமிழ்நாட்டில் சிறப்பு மெகா முகாம் நடந்ததப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி தட்டுபாடு இல்லாமல் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 48 பெட்டிகளில் 5 லட்சத்து 75 ஆயிரம் கோவிட்ஷீல்டு தடுப்பூசி வந்தது. பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல் முறையாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி