சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (டிச.27) புதிதாக 38 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தற்போது கரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு, தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின்போது தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
அவ்வாறு இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களில், “தமிழ்நாட்டில் 349 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் மூலமாக 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 158 பேர், ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் மொத்தமாக 7 கோடியே 10 லட்சத்து 877 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேருக்கும் என பிற மாவட்டங்களிலும் பரவி வருகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடற்கரைப் பகுதிகளைச் சூழ்ந்த இடர்கள்.. ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு ஆபத்தா? - வல்லுநர்களின் அதிர்ச்சியூட்டும் பதில்கள்!