தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில், அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் (மார்ச் 30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ”ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும்” என முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 30.31 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (ஏப்ரல்.01) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி!