தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக கரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, பாதுகாப்பான முறையில் உபகரணங்கள், சிறப்பு ஆலோசனைகள் முறையாக வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்நிலையில், CAHO என்ற அமைப்பு கரோனா காலத்தில் பணியாளர் மற்றும் பணியிட பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் விண்ணப்பித்திருந்தன.
- ராமய்யா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (பெங்களுரு) மற்றும் எனிபோயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (மங்களூர்) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
- பெரிய மருத்துவமனைகள் என்ற அடிப்படையில் (300-600 படுக்கை வசதிகள்) ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி (சென்னை) மற்றும் போர்டிஸ் மருத்துவமனை, மொஹாலி (பஞ்சாப்) முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றன.
- பாய் ஜெர்பாய் வாடியா குழந்தைகள் மருத்துவமனை (மும்பை) மற்றும் தவாம் மருத்துவமனை (அபுதாபி), ஆறுதல் விருதுகளை வென்றன.
இதுகுறித்து CAHO அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் கூறியதாவது, தங்களது பணியாளர்களை பாதுகாப்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகவும் சிரமமான, மன அழுத்தம் தருகின்ற காலகட்டமாக இருந்து வருகிறது. குறைவான அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தபோதிலும் கரோனா தொற்றிலிருந்து தங்கள் பணியாளர்களை பாதுகாக்க அறிவார்ந்த நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருக்கின்றன.
பாதுகாப்பான, மனஅழுத்தம் இல்லாத பணிச்சூழலை தங்கள் பணியாளர்களுக்கு வழங்க சிறந்த முயற்சிகளை எடுக்கின்ற மருத்துவமனைகளை அங்கீகரித்து கௌரவிப்பதே இவ்விருதுகளின் நோக்கம்" என்றார்.
இதையும் படிங்க: கருப்பனுக்கு கண்ணீர் அஞ்சலி: தெரு நாயின் பிரிவால் வாடும் மக்கள்...!