ETV Bharat / state

குற்றாலம் நவீன வசதிகளுடன் 15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் மா. மதிவேந்தன்

author img

By

Published : May 5, 2022, 6:43 PM IST

இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் 15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் மா. மதிவேந்தன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

குற்றாலம் நவீன வசதிகளுடன் 15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் மா. மதிவேந்தன்
குற்றாலம் நவீன வசதிகளுடன் 15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் மா. மதிவேந்தன்

சென்னை: சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் புதிய 28 அறிவிப்புகளை அமைச்சர் மா. மதிவேந்தன் பேரவையில் வெளியிட்டார். அவை,

1. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 4 முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி-ஒளி காட்சி இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து அமைக்கப்படும்.
2. இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
3. திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும்.
4. கன்னியாகுமரியில் உள்ள முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்.
5. முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதியில் படகு சவாரி நடைபாதைகள் பறவைகளை காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய சுற்றுலாத்தலமாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
6. பூண்டி அணைக்கட்டு பகுதியில் நீர் விளையாட்டுகள் படகு சவாரி சாகச விளையாட்டுகள் மற்றும் பறவைகளை காண பார்வையாளர்கள் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
7. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முத்துக்குடா கடற்கரை பகுதியில் நீர் விளையாட்டுகள் படகு சவாரி நடைபாதை கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
8. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் ஏரியில் படகு சவாரி நீர் விளையாட்டுகள் பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு வசதிகள் ரூபாய் 1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
9. செங்கல்பட்டு மாவட்டம் கௌவாய் ஏரியில் படகு சவாரி நீர் விளையாட்டுகள் இரவினிலே காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
10. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வத்தல்மலை பகுதியில் சாகசச் சுற்றுலா திறந்தவெளி முகாம்களில் பறவைகளை காண பார்வையாளர்கள் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
11. தூத்துக்குடி கடற்கரையில் நீர் விளையாட்டுக்கள் மற்றும் கடற்கரை விளையாட்டுக்கள் போன்றவைகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுலா தலமாக ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
12. சுற்றுலாத்துறை பிற துறைகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் புதிய சாலைகள் அமைத்தல் தற்போது உள்ள சாலைகளை மேம்படுத்துதல் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலைத்துறை ரூ.100 கோடி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை ரூ.50 கோடி.
13. கிழக்கு கடற்கரை சாலையில் ஆன்மிக கலாசார சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
14. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உணவகங்கள் நவீனப்படுத்தப் பட்டு புதிய வணிக சின்னத்துடன் சந்தைப்படுத்தப்படும்.
15. சென்னை தீவுத் திடலில் உள்ள டிரைவ்-இன் உணவகம் ரூ.50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
16. சுற்றுலாப் பயணிகளின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் சுற்றுலா உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

17. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வணிக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் மின்னணு மேலாண்மை மென்பொருள் ரூ.50 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
18. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒருநாள் திருப்பதி சுற்றுலாவிற்கு சீக்கிரம் தரிசன நுழைவு சீட்டுக்களை ரூ.150இவ் இருந்து 1000 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்தத் தொகுப்பு சுற்றுலா தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து தொடங்கப்படும்.
19. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் கேரவன் வாகன நிறுத்துமிட பூங்காக்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு இடங்களில் அமைக்கப்படும்.
20. மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் ஒளிரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் பொது தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
21. தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருள்கள் கைவினைப்பொருள்கள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்த சென்னை விழா என்ற பெயரில் ஒரு தேசிய கைவினைப்பொருட்கள் கைத்தறி மற்றும் உணவு விழா சென்னையில் ரூ.1.50 கோடி செலவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும்.
22. வீர விளையாட்டு விழா என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி செலவில் நடத்தப்படும்.
23. சென்னையில் மலர் காய்கறிகள் மற்றும் பனைப் பொருள்கள் கண்காட்சி கோடைவிழா 25 லட்சம் செலவில் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து நடத்தப்படும்.

24. வண்டலூர் கோவளம் மற்றும் ஏற்காடு ஆகிய சுற்றுலா தளங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் quick Bites என்னும் சிறு உணவகம் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
25.சுற்றுலா பயண அமைப்பாளர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா துறையில் பதிவுகள் மேற்கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
26. சுற்றுலா வழிகாட்டிகள் பதிவுசெய்யவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் 50 லட்சம் மதிப்பில் புதிய திட்டம் தொடங்கப்படும்.
27. சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
28.ஆண்டு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருள்காட்சிகள் நடைபெறும் வண்ணம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடலில் மேம்படுத்தப்படும்” ஆகியவை ஆகும்.

இதையும் படிங்க: '2026இல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும்...' கடிதம் வாயிலாகப் பதிலளித்த மத்திய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.