ETV Bharat / state

நிலம் கையகப்படுத்தல் தொடர்பான விவகாரம்.. என்எல்சி-யை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் உத்தரவு! - Chennai High Court

NLC Land Acquisition Case: என்எல்சி-க்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், என்எல்சி-யை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பான விவகாரத்தில் - என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு.
land-acquisition-promises-never-comply-case-mhc-order-nlc-implead
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 9:02 PM IST

சென்னை: என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்படவில்லை எனவும் உறுதியளித்தபடி, குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தலால் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டோர் நலச் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரசாயனம் கலந்த விநாயகர் சிலை விவகாரம் - தமிழ்நாடு அரசு தகவல் தெரிவிக்க உத்தரவு.

அந்த மனுவில், "நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கு தமிழ்நாடு அரசு எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி, இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்". என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர் மட்டுமே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், என்.எல்.சி. தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்து, என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் பார் நடத்த அனுமதி பெற்று தருவதாக கூறி மோசடி! பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.