சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த முறை முதலமைச்சராக இருந்த போது, வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு செய்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அவதுாறு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.சிவக்குமார் முன்,விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே நேரில் ஆஜராகுமாறு மு.க.ஸ்டாலினுக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், வரும் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி - சிறப்பு தரிசனமா...ரகசிய சந்திப்பா?