ETV Bharat / state

சொத்துக்குவிப்பு - சசிகலா பினாமிகள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் பினாமிகள் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சசிகலாவின் பினாமிகள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

author img

By

Published : Oct 25, 2021, 5:29 PM IST

சென்னை: நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சசிகலா வீட்டில் 2017 ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, வி.எஸ்.ஜே.தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி பழைய மாமல்லபுரம் சாலையில் மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

இதை எதிர்த்து வி.எஸ்.ஜே.தினகரன் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை தரப்பில், "கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலுக்கான விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் தரகர் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகினர். இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்தது" என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (அக்.25) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின - நடிகர் விஜய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.