ETV Bharat / state

கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா: மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

author img

By

Published : Nov 30, 2020, 5:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதிப் பற்றாக்குறை உள்ளதாக நான்கு மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

chennai high court
chennai high court

சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல்செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தலைமைச் செயலர் அனுப்பிய கடிதம் ஒன்றை தலைமை வழக்கறிஞர் தாக்கல்செய்தார்.

அந்தக் கடிதத்தில் தமிழ்நாட்டில் தருமபுரி, சிவகங்கை, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 151 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களைப் பொறுத்தவரை மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்படி எல்காட் நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், புதுக்கோட்டை ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய இடங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை கேட்டுள்ளதாகவும், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தவரை விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தவரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை விரைந்து செய்ய வேண்டும், புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விரைந்து அடையாளம் காண வேண்டும் என உத்தரவிட்டனர்.

மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியத்தில் நிதிப்பற்றாக்குறை இருப்பதாக நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அப்பகுதிகளில் வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தியோ அல்லது உபரி நிதி உள்ள மாவட்டங்களிலிருந்து நிதியை பெற்றோ? கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'விவசாயிகளுக்காகப் பேசுங்கள்' - அடக்குமுறைகளுக்கு எதிராக காங்கிரசின் பரப்புரை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.