ETV Bharat / state

களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு விநியோகம் - வழக்கு பதிந்த மனித உரிமை ஆணையம் ! - Corporation distributes food in garbage carts to field worker

சென்னை : கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் வைத்து உணவு விநியோகம் செய்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டுமென மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு விநியோகம் செய்த மாநகராட்சி - வழக்கு பதிந்த மனித உரிமை ஆணையம் !

author img

By

Published : Jul 30, 2020, 7:51 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம்கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலாவது இடத்தில் உள்ளது. அங்கு 97 ஆயிரத்து 575 பேர் பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்தும் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்துவது, பரிசோதனை மையங்களில் உதவி புரிவது, கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தேவையான உணவை தயாரித்து எடுத்துச்செல்ல வாகனம் இல்லாததால், குப்பை வண்டியில் வைத்து விநியோகித்ததாக கூறப்படுகிறது.

மேலும், களப்பணி செய்யும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மாநகராட்சி உயர் அலுவலர்களுக்கு மட்டும் உயர்தர உணவு வழங்கப்படுவதாகவும், கடைநிலை ஊழியர்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் பரவலாக பேசப்பட்டதையடுத்து பத்திரிகைகளில் இது தொடர்பாக செய்திகள் வெளியாகின.

ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

மனித உரிமைகள் ஆணையத்தின் மாநில உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சென்னை பெரு மாநகராட்சி ஆணையரை இது குறித்து 3 வாரத்தில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.