ETV Bharat / state

அம்பத்தூரில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் மாநகராட்சி!

சென்னை: அம்பத்தூர் பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க அரசு அலுவலர்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

corporation-intensifying-corona-surveillance-in-ambattur

author img

By

Published : Apr 15, 2020, 12:49 PM IST

சென்னையில் இதுவரை 211 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர், மணலி போன்ற மண்டலங்களில் இதுவரை கரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் அந்த இரண்டு பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அலுவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7ஆவது மண்டலத்தில் மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீதி வீதியாகச் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல் அம்மா உணவகம், சுகாதார நிலையம் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

அம்பத்தூரில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் மாநகராட்சி

அம்பத்தூர் மண்டலத்தில் நோய் பரவலைத் தடுக்க அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பிரத்யேகமாக கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: குழந்தையைப் பராமரிக்க பணமில்லை: கடிதத்துடன் கைவிடப்பட்ட குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.