சென்னை மாநகராட்சியில் 1,033 கி.மீ தொலைவிற்கு ரூபாய் 4,070 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் என 400க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் தற்பொழுது மழை நீர் வடிகால் பணிகள் 90 விழுக்காடு நிறைவுபெற்றுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் பணிகள் முழுமையாக இல்லாமல் இணைப்புப்பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன, அந்த இணைப்புப்பகுதிகளை மையப்படுத்தி மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில் 719 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு குதிரை திறன் முதல் நூறு குதிரை திறன் வரை இருக்கக்கூடிய மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு மின்மோட்டார்களும் அதிநவீன வகையில், நிமிடம் ஒன்றுக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: போட்டித் தேர்வுகள்... தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச பயிற்சி...