இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவுப்படி மூடப்படுகின்றது
இதேபோல் ஆடு, மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசு உத்தரவின்படி கண்டிப்பாக ஜனவரி 15ஆம் தேதி முழுவதும் அனைத்து இறைச்சி கூடங்கள், இறைச்சி கடைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறைச்சி கையேட்டிலிருந்து 'ஹலால்' என்னும் சொல் நீக்கம்