சென்னை: கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அதனை மேலும் குறைப்பதற்கு கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்டப் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கரோனா பாதிப்பு:
நேற்றைய நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விழுக்காடு 0.3-ஆக உள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 98 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளனர்.
மீதமுள்ள ஆயிரத்து 776 பேர்கள் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை 1.54 விழுக்காடாக உள்ளது.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
5 லட்சத்து 33ஆயிரத்து 849 ஆக உள்ளது. இவர்களில் 5 லட்சத்து 23ஆயிரத்து 841 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், 8 ஆயிரத்து 232 பேர் இறந்துள்ளனர்.
கரோனா பரிசோதனை:
சென்னையில் சராசரியாக 53.68 விழுக்காடு ஆண்களும், 46.31 விழுக்காடு பெண்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூலை 07) மற்றும் சென்னையில் சுமார் 26ஆயிரத்து 924 நபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 208 நபர்களுக்கு மட்டுமே கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது சென்னையில் கரோனா பரவல் விகிதம் கிட்டத்தட்ட 0.8 விழுக்காடாக உள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களிடம் 1.67 கோடி தடுப்பூசிகள் உள்ளன - சுகாதாரத்துறை அமைச்சகம்