இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
'பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் வாயிலாக 2018-19ஆம் ஆண்டில் கல்வி பயின்று 11ஆம் வகுப்பில் 1,743 மாணவர்கள், 3,090 மாணவிகள் என மொத்தம் 4,833 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.
இவர்களில் 1,565 மாணவர்கள், 2,955 மாணவிகள் என மொத்தம் 4, 520 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மொத்த தேர்ச்சி 93.52 விழுக்காடு ஆகும். இதில் மாணவர்கள் தேர்ச்சி-89.79 விழுக்காடு, மாணவிகள் -95.63 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், 14 மாணவ-மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார்கள். 450க்கு மேல் 74 பேர் பெற்றுள்ளார்கள்.
நெசப்பாக்கத்தில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.