ETV Bharat / state

'கரோனா தடுப்பு நடவடிக்கையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்!' - chennai district news

சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பது தெரியவந்தால் தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 3இன்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Corporation Commissioner Prakash press relesh

author img

By

Published : Mar 22, 2021, 6:29 PM IST

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்குள்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள், இதர கடைகள் ஆகியவற்றில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், அவ்வப்போது கைக்கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவதை கடை உரிமையாளர்கள் கண்காணித்து உறுதிசெய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் கடைகளின் வாயிலில் டெட்டால், சானிடைசர் போன்ற திரவங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 50 வயதுக்குள்பட்ட இணை நோய்கள் உள்ள பணியாளர்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.

கரோனா வைரஸ் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பது தெரியவந்தால் தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 3இன்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வடக்கு மண்டல ஐஜியாக பெரியய்யாவிற்குக் கூடுதல் பொறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.