இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
"சென்னை மாநகராட்சியில் 12 கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்கள் (screening centres) மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியில் உள்ள 14 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 11,000 படுக்கைகளுடன் மிக குறைந்த தொற்று உள்ளவர்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனை மூலம் பரிந்துரைக்கப்படுவர்களுக்கும் போதுமான மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெறும் பொருட்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள், தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ கரோனா தொற்று பாதுகாப்பு மையங்களை (Covid Care Centres) ஆரம்பிக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கிறது.
அவ்வாறு கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்கள் (Covid Care Centres) தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள் படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல், மாநகர நல அலுவலர் (தலைமையகம்) (94450 26050) அணுகலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
தமிழ்நாட்டில் கரோனா அதிகரித்து வருவதனால், கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற, 50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கக் கோரி தனியார் மருத்துவமணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: காங். எம்பி ராகுலுக்கு கரோனா!