தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
மேலும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மருத்துவ ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் தவிர அங்கு யாரும் நுழையக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் இதுவரை 594 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- ராயபுரம் - 131
- திரு.வி.க. நகர் - 98
- வளசரவாக்கம் - 17
- தண்டையார்பேட்டை - 13
- தேனாம்பேட்டை - 48
- அம்பத்தூர் - 52
- கோடம்பாக்கம் - 33
- திருவொற்றியூர் - 32
- அடையாறு - 19
- அண்ணா நகர் - 9
- மாதவரம் - 56
- மணலி - 42
- சோழிங்கநல்லூர் - 18
- பெருங்குடி - 12
- ஆலந்தூர் - 14
தொடர்ந்து 28 நாள்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று இல்லை என்றால், அப்பகுதிகளுக்கு தளர்வளிக்கப்படும். அந்த வகையில் இன்று மட்டும் 41 தனிமைப்பட்ட பகுதிகள் தளர்வு பகுதிகளாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!