ETV Bharat / state

கோயம்பேடு சந்தை மூடல்: திருமழிசைக்கு மாற்றம் - கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றம்

thirumazhisai
thirumazhisai
author img

By

Published : May 4, 2020, 6:42 PM IST

Updated : May 4, 2020, 7:40 PM IST

18:38 May 04

கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றம்

சென்னை: கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிமாக மூடப்படுவதாக, சந்தை நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வியாபாரிகள், காய்கறி வாங்கியவர்கள் என பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கோயம்பேடு சந்தையில் கூடியவர்கள் வாயிலாக கரோனா தொற்று வேகமாக பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், பொதுமக்கள் நலன் கருதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக சந்தை நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பொது மக்களின் பாதுகாப்புக் கருதி, கோயம்பேடு சந்தை நாளை (05.05.2020) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் தடையின்றி கிடைக்க, சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அதற்கான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்குச் சென்று காய்கறிகளை கொள்முதல் செய்துக்கொள்ளலாம்" என சந்தை நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: தனியார் கல்லூரிக்கு தொடர்ந்து மாற்றப்படும் கரோனா நோயாளிகள்!

Last Updated : May 4, 2020, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.