ETV Bharat / state

கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது - அமைச்சர் பாண்டியராஜன் - Minister Pandiyarajan has reported that the coronavirus has come under control in Chennai

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாகவும் அதனால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

chennai is under control corona said minister pandiyarajan

author img

By

Published : Jul 6, 2020, 4:54 PM IST

சென்னையில் தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கரோனாவிற்கு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட 8 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

அவர்களை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தண்டையார்பேட்டை மண்டலம் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்திலிருந்து இப்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. வடசென்னை பகுதியில் உள்ள கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவமனை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு 224 படுக்கை வசதி கொண்ட இந்த மையத்தில் 107 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இன்று எட்டு பேர் தொற்று பாதிப்பிலிருந்து சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டு பூரண குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.

chennai is under control corona said minister pandiyarajan

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வளர்ச்சி விகிதம் கடந்த சில நாள்களாக குறைந்துகொண்டே வருகிறது. தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இன்றிலிருந்து சென்னையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம், தகந்த இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். மேலும் கூடுதலாக சித்த மருத்துவ மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: உங்களுக்காகவாவது முகக்கவசம் அணிந்து கவனமுடன் இருங்கள் - அமைச்சர் வேலுமணி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.