கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றும் தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் அம்மா மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 40 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது தன்னார்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. அவை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 650 குடிசை பகுதிகள் உள்ளன. குடிசை பகுதிகள், கட்டுப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
தன்னார்வலர்கள் பொதுமக்களை அணுகி முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க...மின்சார சட்டத்தை திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்