இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பரிசோதனையின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், கரோனா பாதிப்பு பொதுமக்களிடம் சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 53 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் 13 ஆயிரத்து 367 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 669 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 5 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 135 பேர் குணமடைந்து இன்று வீட்டுக்குத் திரும்பினர். இதுவரை, 1 ஆயிரத்து 959 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 74 வயது முதியவர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 59 வயது முதியவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 55 வயது முதியவர் கரோனா தொற்றுடன் மேலும் சில நோய்கள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 37 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 368 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக பாதிப்பு பின்வருமாறு
வரிசை எண் | மாவட்டங்கள் | பாதிப்பு விவரம் |
1 | சென்னை | 3,839 |
2 | கடலூர் | 395 |
3 | திருவள்ளூர் | 337 |
4 | விழுப்புரம் | 299 |
5 | அரியலூர் | 275 |
6 | செங்கல்பட்டு | 267 |
7 | கோயம்புத்தூர் | 146 |
8 | காஞ்சிபுரம் | 122 |
9 | மதுரை | 117 |
10 | திருப்பூர் | 112 |
11 | திண்டுக்கல் | 107 |
12 | பெரம்பலூர் | 104 |
13 | திருநெல்வேலி | 90 |
14 | நாமக்கல் | 76 |
15 | ஈரோடு | 70 |
16 | திருவண்ணாமலை | 67 |
17 | ராணிப்பேட்டை | 66 |
18 | தஞ்சாவூர் | 65 |
19 | திருச்சிராப்பள்ளி | 63 |
20 | தேனி | 59 |
21 | கள்ளக்குறிச்சி | 58 |
22 | தென்காசி | 52 |
23 | கரூர் | 48 |
24 | நாகப்பட்டினம் | 45 |
25 | விருதுநகர் | 39 |
26 | சேலம் | 35 |
27 | திருவாரூர் | 32 |
28 | தூத்துக்குடி | 30 |
29 | வேலூர் | 32 |
30 | கன்னியாகுமரி | 25 |
31 | ராமநாதபுரம் | 26 |
32 | திருப்பத்தூர் | 28 |
33 | கிருஷ்ணகிரி | 20 |
34 | நீலகிரி | 13 |
35 | சிவகங்கை | 12 |
36 | புதுக்கோட்டை | 6 |
37 | தருமபுரி | 4 |
மேலும், கரோனாவால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் புதிதாக தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.