தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 6) ஒரே நாளில் 3,783 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,747 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆகவும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571ஆகவும் உள்ளது. மேலும், இன்று கரோனா வைரஸிலிருந்து 3,793 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி மாவட்ட வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோர் விவரம்:
- அரியலூர் - 475
- செங்கல்பட்டு - 6,853
- சென்னை - 70,017
- கோவை - 801
- கடலூர் - 1277
- தருமபுரி - 128
- திண்டுக்கல் - 725
- ஈரோடு - 288
- கள்ளக்குறிச்சி - 1,246
- காஞ்சிபுரம் - 2,729
- கன்னியாகுமரி - 638
- கரூர் - 170
- கிருஷ்ணகிரி - 200
- மதுரை - 4,338
- நாகப்பட்டினம் - 310
- நாமக்கல் - 113
- நீலகிரி - 150
- பெரம்பலூர் - 170
- புதுக்கோட்டை - 375
- ராமநாதபுரம் - 1,454
- ராணிப்பேட்டை - 1,193
- சேலம் - 1,288
- சிவகங்கை - 564
- தென்காசி - 468
- தஞ்சாவூர் - 499
- தேனி - 1,128
- திருப்பத்தூர் - 282
- திருவள்ளூர் - 4,983
- திருவண்ணாமலை - 2,534
- திருவாரூர் - 553
- தூத்துக்குடி - 1,171
- திருநெல்வேலி - 1,114
- திருப்பூர் - 220
- திருச்சி - 1,004
- வேலூர் - 1,980
- விழுப்புரம் - 1,232
- விருதுநகர் - 975
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் விவரம்:
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 442
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 369
- ரயில் மூலம் வந்தவர்கள்: 421
இதையும் படிங்க: கரோனா தொற்றால் சித்த மருத்துவர் உயிரிழப்பு