தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதனால் அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் தலைவருமான பா.வளர்மதிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். ஏற்கனவே மறைந்த அன்பழகன் உள்பட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேருக்கும், அதிமுகவில் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்பட 5 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு