ETV Bharat / state

சைமன் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த வழக்கு: 12 பேருக்கு நிபந்தனை பிணை! - corona victim simon Hercules burial case

சென்னை: கரோனா வைரசால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததாகக் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
court
author img

By

Published : May 23, 2020, 4:45 PM IST

Updated : May 23, 2020, 8:35 PM IST

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலிஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அலுவலர்களை அங்கிருந்து துரத்தியதாகவும் 10க்கும் மேற்பட்டோர் மீது டிபி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்வேந்தன், அப்பு, மோகன், ஜெயமணி, ஜெயபிரதா, ஜெனிதா, மாரியம்மாள், சரஸ்வதி, கிருஷ்ணவேணி, தினேஷ், மஞ்சுளா, பத்மபிரியா ஆகிய 12 பேரும் தங்களுக்குப் பிணை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (மே23) விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அடக்கம் செய்யப் போவதாக தகவல் வந்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், உடலை எடுத்துச் சென்றபின் தாங்கள் கலைந்து சென்றுவிட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் காவல் துறையினர் தங்களைத் தவறுதலாக கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்துள்ளதாகக் கூறி பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலில் இருந்து வைரஸ் பரவும் என்ற வதந்தி காரணமாக மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டி 12 பேருக்கும் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள், வழிமுறைகள் குறித்து அரசு அலுவலர்கள் முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்கு தெரிவித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்து இருக்கலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மனுதாரர்கள் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான பிணைத் தொகையைச் செலுத்த வேண்டும் எனவும், இதுபோன்ற குற்றச் செயலில் இனிமேல் ஈடுபடக்கூடாது, தலைமறைவாகக் கூடாது, சாட்சிகளைக் கலைக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலும் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 36 வயது பெண் பாலியல் வன்புணர்வு: மூன்று பேர் கைது!

Last Updated : May 23, 2020, 8:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.