ETV Bharat / state

கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

author img

By

Published : Jul 8, 2021, 8:10 PM IST

தமிழ்நாட்டிற்கு கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் -   உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் கட்டப்பட்டு வந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத் திட்டப்பணி தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

இதில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். மேலும் கட்டட வளாகத்தில் மரக்கிளைகளை நட்டு வைத்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியதாவது, 'சிதிலமடைந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சென்னையில் உள்ளன. கடந்த ஆட்சியில் அவற்றைப் பராமரிக்கவோ, சீரமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முதலமைச்சர் உத்தரவின்பேரில், அந்த வகையில் 20 ஆயிரம் கட்டடங்களும் மாற்றியமைக்கப்படும். மேலும் நம்மை எதிர்த்தவர்கள் கூட தற்போது வாழ்த்தும் அளவிற்கு ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது' என்று அவர் தெரிவித்தார்.

பொதுநலத்தில் சுயநலம் கொண்ட உதயநிதி

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், 'இந்நிகழ்வில் பங்கேற்றதற்குக் காரணம், சேப்பாக்கம் தொகுதியில் புதிதாக குடிசை மாற்று குடியிருப்புகள் கட்ட வேண்டியுள்ளது அதனால் தான். இதில் என் சுயநலமும் உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்போது தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

ஆனால், முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க அமைச்சர்கள் சீரிய முறையில் செயல்பட்டதால், கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் தற்போது தடுப்பூசி இல்லை என்பது மட்டும் தான் ஒரே குறை. எனவே ஒன்றிய அரசு விரைந்து தடுப்பூசிகளை வழங்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கருணாநிதி கூறியது போன்று, இது பதவி அல்ல; ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு. இதனைக் கவனத்தில்கொண்டு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயல்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள், திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.