ETV Bharat / state

தடுப்பூசி முன்னுரிமைப்பட்டியலில் மாற்றுத்திறனாளிகளை சேர்க்கக்கோரிய மனு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

கரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமைப் பட்டியலில் மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்கக்கோரிய மனுவுக்கு மத்திய - மாநில சுகாதார துறை செயலாளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Corona vaccine first preferences for disabled persons, MHC notice order

author img

By

Published : Feb 12, 2021, 11:56 AM IST

கரோனா தொற்று பரவாமல் தடுக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு, சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளையும் முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சமூக நீதி முன்னேற்றத்துக்கான மைய இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், 'கரோனா தடுப்பு விதிகளான தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவற்றைப் பின்பற்றுவதில் சவால்களை சந்திப்பதால் மாற்றுத்திறனாளிகள் அதிகளவு, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது வயதுக்குக் குறைவான, பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை அளித்த மத்திய அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க தவறிவிட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா தடுப்பூசி போட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில சுகாதாரத்துறைகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.