மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (செப் 17) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மூன்று தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் ஆய்வகங்களில் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 683 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழகத்திலிருந்த ஐந்தாயிரத்து 555 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த நான்கு பேருக்கும், தெலுங்கானாவில் இருந்துவந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 560 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 60 லட்சத்து 23 ஆயிரத்து 627 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரத்து 610 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்தாயிரத்து 524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி இன்று 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியான கரோனா பாதிப்பு விவரம்
சென்னை மாவட்டம்- 1,52,567
செங்கல்பட்டு மாவட்டம்- 31,712
திருவள்ளூர் மாவட்டம்- 29,446
கோயம்புத்தூர் மாவட்டம்- 24,234
காஞ்சிபுரம் மாவட்டம்- 20,079
கடலூர் மாவட்டம்- 17,309
மதுரை மாவட்டம்- 15,647
சேலம் மாவட்டம்- 15,633
தேனி மாவட்டம்- 14043
விருதுநகர் மாவட்டம்- 13889
திருவண்ணாமலை மாவட்டம்- 13,802
வேலூர் மாவட்டம்- 13,162
தூத்துக்குடி மாவட்டம்- 12620
ராணிப்பேட்டை மாவட்டம்- 12,465
திருநெல்வேலி மாவட்டம்- 11516
கன்னியாகுமரி மாவட்டம்- 11,432
விழுப்புரம் மாவட்டம்- 9981
திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 9227
தஞ்சாவூர் மாவட்டம்- 8899
கள்ளக்குறிச்சி மாவட்டம்- 8411
திண்டுக்கல் மாவட்டம்- 8139
புதுக்கோட்டை மாவட்டம்- 7839
தென்காசி மாவட்டம்- 6540
ராமநாதபுரம் மாவட்டம்- 5299
திருவாரூர் மாவட்டம்- 5784
திருப்பூர் மாவட்டம்- 5544
ஈரோடு மாவட்டம்- 5002
சிவகங்கை மாவட்டம்- 4669
நாகப்பட்டினம் மாவட்டம்- 4471
திருப்பத்தூர் மாவட்டம்- 4042
நாமக்கல் மாவட்டம்- 3786
கிருஷ்ணகிரி மாவட்டம்- 3481
அரியலூர் மாவட்டம்- 3,378
நீலகிரி மாவட்டம்- 2678
கரூர் மாவட்டம்- 2380
தருமபுரி மாவட்டம்- 2446
பெரம்பலூர் மாவட்டம்- 1611
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 924
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 905
ரயில் மூலம் வந்தவர்கள்- 428