கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், சாதாரண அறிகுறியுடன் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, சென்னையில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த சாதாரண அறிகுறியுடன் நலமாக இருந்தவர்களை தனிமைப்படுத்தும் மையத்திற்கு மக்கள் நல்வாழ்வு துறை மாற்றியுள்ளது.
இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வசதி உள்ளவர்களுக்கு தேவையான மாத்திரைகளை அளித்து 24 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியும் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.