சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சலையில் ஜி.ஆர்.டி தங்க நகைக்கடை உள்ளது. இந்த கடையின் முன்பகுதியை மூடிய நிலையில் பின்பகுதி வழியாக வாடிக்கையாளர்கள் வந்து செல்வதாக தாம்பரம் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து நகராட்சி அலுவலர்கள் தாம்பரம் காவல் துறையினருடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பின் பக்க கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் நகைக்கடை ஊழியர்களும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் வேலை பார்த்து வந்தனர். இதனால் இரண்டாம் முறையாக ரூ. 5 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.
மேலும் கடையில் இருந்த நிர்வாகிகளிடம் அலுவலர்கள் இனிமேல் இப்படி அரசு உத்தரவை அலட்சியம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். நகராட்சி அலுவலர்கள் முன்னிலையிலே ரூ. 5 ஆயிரம் அபராதத்தை கட்டிய நகைகடை நிர்வாகிகள் அபராத ரசீதையும் பெற்றனர்.