தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நாளை மறுநாள் (மே 2) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்துவருவதால் வாக்கு எண்ணிக்கைக்கு விண்ணப்பித்த முகவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மூன்று வாக்குச்சாவடிக்கு விண்ணப்பித்த 395 முகவர்களுக்கு சென்னை ராயபுரத்தில் உள்ள மருத்துவமனையில் கரோனா மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட நிலையில் இவர்கள் வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.