தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 22) வரை 14,753ஆக இருந்த நிலையில் இன்று மட்டும் 710 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் 624 பேரும், செங்கல்பட்டில் 39 பேரும், திருவள்ளூரில் 17 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 98 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் 50 வயதை கடந்த நான்கு ஆண்கள், ஒரு பெண் உள்பட ஐந்து பேர் உயரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இன்று (மே 23) வரை 15,512 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 4,051 பேரும், அரியலூரில் 348 பேரும் குணமடைந்துள்ளனர்.
கடந்த 9ஆம் தேதி முதல் இன்று வரை வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 38 பேருக்கும், ரயில் மூலம் தமிழ்நாடு வந்த ஐந்து பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
![corona positive cases in TN](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-coronapositive-script-7204624_23052020184129_2305f_1590239489_976.jpeg)
![corona positive cases in TN](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-coronapositive-script-7204624_23052020184129_2305f_1590239489_748.jpeg)