சென்னை ஆவடி மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று தீவிரமடைந்துவருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோயில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி, முத்துபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 10 முதல் 20 பேர் வரை உள்ளது.
இது வரை 385 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருவள்ளூர், சென்னை அரசு மருத்துவமனைகளில் 200 பேர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதற்கிடையே நேற்று (ஜூன் 13) ஒரே நாளில் ஆவடி மாநகராட்சி பகுதியில் 3 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர்.
ஆவடி ஜெ.பி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 48 வயது தனியார் கம்பெனி ஊழியர் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 14) உயிரிழந்தனர். இதுவரை 16 பேர் தொற்றால் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். ஆவடி மாநகராட்சி கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா எண்ணிக்கை 1,797ஆக உயர்வு