சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில், கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், அவ்வாறு சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ”ஒரு அறையில் 34 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. அறையின் உள்ளே விஷ பாம்புகளெல்லாம் வருகின்றன. குடிப்பதற்கு தண்ணீரும் முறையாக வழங்குவதில்லை. வளாகத்தின் வெளியே பன்றிகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. சிகிச்சை அளிக்கும் அறையில் சுகாதாரமும் பேணப்படுவதில்லை” என்றனர்.
இதையும் படிங்க : அவதூறு பரப்பும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தும் திருமா