ETV Bharat / state

தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி!

தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி

author img

By

Published : May 4, 2021, 7:41 PM IST

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தாக்கம் வேகமாகப் பரவிவருகிறது. அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில், கரோனா ஒருங்கிணைந்த கட்டளை மையம் (UCC) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 104 சுகாதார சேவை மையங்களுடன் இணைந்து, அரசு, தனியார் மருத்துவமனைகளில் செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளுக்குப் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம் அல்லது 104 GoTN (@104_GoTN) என்ற ட்விட்டர் கணக்கில் விவரங்களை பெற்று வருகின்றனர்.

படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி
படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி

தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்ட்டிலேட்டர்கள் எண்ணிக்கை, தற்பொழுது https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரம் பெறலாம்.

சென்னையில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் வென்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் போதுமானதாக இல்லை.

தினசரி கரோனா பாதிப்பு என்பது தமிழ்நாட்டில் 21 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 6,000 கடந்து பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் நோக்கி செல்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் நேற்று (மே.3) முதல் 32,785 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டில் 9,257 நபர்களும், காஞ்சிபுரத்தில் 3,026 நபர்களும், திருவள்ளுரில் 5,973 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள 225 சாதாரணப் படுக்கைகளில் 10 மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுள்ள 198 படுக்கைகளில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. 102 ஐசியு படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. மொத்தமாக இருக்கக்கூடிய 525 படுக்கைகளில் 10 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 250 சாதாரணப் படுக்கைகளில் 25 மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுள்ள 108 படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. 92 ஐசியு படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. மொத்தமாக இருக்கக்கூடிய 450 படுக்கைகளில் வெறும் 25 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 576 சாதாரணப் படுக்கையில் 399 மட்டுமே காலியாக உள்ளன. 657ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கையில் 4 மட்டுமே காலியாக உள்ளன. 385 ஐசியு படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. மொத்தமாக இருக்கக்கூடிய 1,618 படுக்கைகளில் 403 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மொத்தம் 575 படுக்கைகளில் 41 மட்டுமே காலியாக உள்ளன. மேலும் 41 சாதாரணப் படுக்கைகள், 260 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள், 190 ஐசியு வசதியுள்ள படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 450 சதாரண படுக்கைகளில் 45 காலியாக உள்ளன. 600 ஆக்சிஜன் படுக்கைகளில் ஒன்றும், 150 ஐசியு படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. மொத்தமாக இருக்கக்கூடிய 1,200 படுக்கைகளில் 46 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

அதேபோல் அரசு மருத்துவமனைகளின் கீழ் இயங்கி வரும் 13 மருத்துவமனைகளிலும், 15 தனிமைப்படுத்தும் மையங்களிலும் உள்ள ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் உடன் கூடிய படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் தீவிர கரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாநகராட்சியின் சில கரோனா சிகிச்சை மையங்களில் மட்டுமே பெரும்பாலான படுக்கைகள் காலியாக உள்ளது. சென்னையில் உள்ள 88 தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 43 அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன்கள், வென்ட்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 33 அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறப்போர் இயக்கத்தின் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பாளர் சுருதி சுகாதார செயலருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் முக்கியமாக ஐசியு, வென்ட்டிலேட்டர், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள், stop corona, TNeGA போர்ட்டல்களில் வெளியிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்ற தளத்தில் முழுமையாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், படுக்கை வசதிகளின்றி கரோனா நோயாளிகள் அவதிப்பட்டுவருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போதுதான் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி நோயாளிகள் அவதிப்படுவதை பார்க்கும் அவர்களது உறவினர்கள் மனவேதனை அடைகின்றனர்.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.