ETV Bharat / state

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா; மாவட்ட ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு! - கரோனா கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

radhakrishnan
ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jun 8, 2022, 9:04 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்புக்கான 5 வழிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத் துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த சில நாள்களாக கேரளா, மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பிஏ4 மற்றும் பிஏ5 வகை ஒமைக்ரான் புதிய கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன; தமிழகத்திலும் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது எனவே அதனை ஆரம்ப நிலையில் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்தல், பரிசோதனை நடவடிக்கைகள், தொடர்பில் இருந்தோரை கண்டறிதல், சிகிச்சை நடைமுறைகள், தடுப்பூசி செலுத்துதல் என ஐந்து வகையான வழிமுறைகளை கையாளுவதை மாவட்ட நிர்வாகங்கள் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்றும் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்தாதோரைக் கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒமைக்ரான்.. ஸ்ரீபெரும்புதூரில் 2 மாணவர்கள் பாதிப்பு.. மக்களே உஷார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.