கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நகரில் சாலையோரங்களில் பழங்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஊரடங்கின் போது சென்னை மாநகராட்சியில் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளது. ஆனால், சாலையோரங்களில் மூன்று மற்றும் நான்கு சக்கர சைக்கிள் உள்ளிட்டவைகளில் பழங்கள் விற்பனை செய்யும் ஏராளமான வியாபாரிகளுக்கு எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் சாலையோர பழ வியாபாரிகள்.
இது குறித்து பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், "காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே கடை நடத்த அனுமதிக்கப்படுகிறோம். மக்கள் அதிகம் பழங்கள் வாங்குவதில்லை என்பதால் எங்களின் தினசரி வாழ்க்கை நகர்வுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதுபோல் அரசு எங்களுக்கும் உதவித் தொகையினை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க...தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!