சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”இதுவரை தமிழ்நாட்டிற்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் வந்த 17,000 நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்னர். இதில் 1,603 பயணிகள் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். சீனாவிலிருந்து மத்திய அரசு மூலம் இந்தியா வந்தடைந்த 83 நபர்களும் கண்காணிக்கப்பட்டு, அவர்களை பரிசோதித்ததில் கரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. சீனாவிலிருந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 நபர்களில் 32 நபர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ அறிக்கை வந்துள்ளது. 4 நபர்களுக்கு இன்னும் அறிக்கை வரவில்லை. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இல்லை என்றும் கொரானா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கேரளா மாநிலத்திற்கு அருகில் உள்ள 5 மாவட்டங்களில் உள்ள மக்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதயும் படிங்க: ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து விவசாய நிலம் நாசம்: விவசாயி வேதனை