ETV Bharat / state

'கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது’ - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

author img

By

Published : Jun 2, 2021, 4:30 PM IST

சென்னை: கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், நேற்று (ஜூன்.01) மட்டும் மருத்துவமனைகளில் 25,134 படுக்கைகள் காலியாக இருந்தது நம்பிக்கை அளிப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

சென்னை தொழில் வர்த்தக சபை சார்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 72 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. இது சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள், சேவை மனபான்மை கொண்டவர்கள், தொழில் முனைவோர்கள், மனிதாபிமானமிக்கவர்கள் என பல்வேறு தரப்பினரும் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்று (ஜூன் 1) ஒரே நாளில் 26,513 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த நான்கு நாட்களாக கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, நம்பிக்கை தரும் நிகழ்வு ஆகும். முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது, மக்களுக்கும் இது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

நேற்று 8,072 ஆக்ஸிஜன் படுக்கைகள், 14,444 ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைகள், 618 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தமாக 25,134 படுக்கைகள் காலியாக இருந்தன. கரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை உருவாகும். தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது, அதில் முதற்கட்டமாக ஐந்து லட்சம் அளவிற்கு தடுப்பூசிகள் நேற்று வந்தடைந்தன. இவை 37 மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இதனால் அடுத்த நான்கு நாட்கள் வரை தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும், பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வில்லாமல் நடைப்பெற்று வருகிறது, செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் தொடர்பாக விரைவில் ஒன்றிய அரசிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய தடுப்பூசி டெண்டர் தொடர்பாக 4ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, ஜூன் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில், தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை, கரோனா குறித்த அச்சம் பொதுமக்களுக்கு தேவையில்லை" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.