ETV Bharat / state

30-39 வயதினரை குறிவைக்கும் கரோனா

author img

By

Published : Apr 11, 2021, 7:14 PM IST

Updated : Apr 12, 2021, 9:26 AM IST

சென்னை: 30 முதல் 39 வயது உடையவர்களே கரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

30-39 வயதினரை குறிவைக்கும் கரோனா
30-39 வயதினரை குறிவைக்கும் கரோனா

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

கரோனா வைரசிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடும் 93 ஆக குறைந்துள்ளது . அதே போல் சிகிச்சைபெற்று வருபவர்களில் விழுக்காடு 5 ஆக உயர்ந்துள்ளது. ஆறு மண்டலங்களில் சிகிச்சைபெற்று வருபவர்களில் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.

சென்னையில் 30 முதல் 39 வயது உடையவர்கள் 20.41 சதவீதம் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தபடியாக 40 முதல் 49 வயது உடையவர்கள் 18.76 சதவீதம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆண்கள் 59.24 சதவீதமும் பெண்கள் 40.76 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்

30-39 வயதினரை குறிவைக்கும் கரோனா
30-39 வயதினரை குறிவைக்கும் கரோனா

சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக சிகிச்சைபெற்று வருபவர்களில் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,

அண்ணா நகர் -1581 பேர்

கோடம்பாக்கம் - 1375 பேர்

தேனாம்பேட்டை - 1622 பேர்

ராயபுரம் - 1329 பேர்

அடையாறு - 920 பேர்

திரு.வி.க. நகர் - 1113 பேர்

தண்டையார்பேட்டை - 857 பேர்

அம்பத்தூர் - 1088 பேர்

வளசரவாக்கம் - 840 பேர்

ஆலந்தூர் - 698 பேர்

பெருங்குடி - 689 பேர்

மாதவரம் - 519 பேர்

திருவொற்றியூர் - 347 பேர்

சோழிங்கநல்லூர் - 329 பேர்

மணலி - 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 435 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 14 ஆயிரத்து 382 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் நான்காயிரத்து 312 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 12, 2021, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.