ETV Bharat / state

ஒரு சில நாட்களில் கரோனா பரவல் முடிவுக்கு வரும்!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு சில நாட்களில் கரோனா தொற்று முடிவுக்கு வரும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Jun 22, 2021, 1:09 PM IST

Updated : Jun 22, 2021, 3:23 PM IST

சென்னை கலைவானர் அரங்கில் இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று(ஜூன்.22) நடைபெற்றது. அதில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் விஜயபாஸ்கருக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிக்கும் மையம்:

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிற்கே தடுப்பூசி வழங்கும் அளவில் தடுப்பூசி தயாரிக்கும் மையம் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

கரோனா நோயாளிகள் மையத்திற்கு ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர், மருத்துவர்கள் அறிவுறுத்தியும் கேட்காமல் உள்ளே சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பிறகு முன்கள பணியாளர்களை உற்சாகப்படுத்த கரோனா மையத்திற்குள் சென்றதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அனைவருக்கும் தடுப்பூசி :

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தடுப்பூசிகள் சரியான நேரத்தில் வந்தால் அனைவருக்கும் தடுப்பூசி என்ற நிலையை எளிதாக எட்டி விடலாம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த ஐம்பது நாட்களில் 150 கிராமங்களுக்கு மேல் சென்று நேரில் ஆய்வு செய்துள்ளோம்.

கரோனா நோய்த்தொற்று ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதில் மக்கள் தற்போது மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக 4, 5 மணி நேரமானாலும் பொது மக்கள் வரிசையில் பொறுமையாக காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இது இந்த அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தெரிவித்தார்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயார்:

மூன்றாவது அலை வரக்கூடாது என நினைக்கின்றோம். அப்படி மூன்றாவது அலை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார். ஆக்சஸிஜன் படுக்கைகள், மற்றும் மருத்துவ வசதிகள் தமிழ்நாட்டில் தயாராக உள்ளது. 2,510 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 130 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

கரோனா தொற்றில் மிகப் பெரிய சரிவு தமிழ்நாட்டில் வந்துள்ளது. இன்னும் அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தொற்று முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 42 ஆயிரமாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

Last Updated : Jun 22, 2021, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.